காபூல்:அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கன் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கியதிலிருந்தே தலிபான்கள் ஆதிக்கம் அங்கு அதிகரித்துவிட்டது. 10 நாள்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி ஆப்கனைக் கைப்பற்றி விட்டனர். அந்த வகையில், ஆகஸ்ட் 15ஆம் அதிபர் மாளிகை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
அதற்கு முன்னதாகவே, அப்போதைய அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார்.இதனைத்தொடர்ந்து, தலிபான்கள் ஆட்சிக்கு அதிருப்தி தெரிவித்து ஆப்கன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். காபூல் விமான நிலையம் முடக்கப்பட்டு, ராணுவ விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன.
இதையும் படிங்க:இ-எமர்ஜென்சி விசா: இந்தியர்களை மீட்க விரைவு நடவடிக்கை
இதனால் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். இதனிடையே, ஆகஸ்ட் 16ஆம் தேதி சிலா் அங்கிருந்து புறப்பட்ட தயாரான அமெரிக்க ராணுவ விமானத்தின் வெளிப்புற பகுதிகளில் தொற்றிக்கொண்டு செல்ல முயன்றனர். விமானம் பறக்கத் தொடங்கியதும், மூன்று பேர் கீழே விழுந்து உயிரிழந்தனா்.