மும்பை: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மாநிலத்தில் பல குற்றச் சதி வழக்குகள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டதாகக் பெண் வழக்குரைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 21) மலபார் ஹில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பெண் வழக்குரைஞர் புகார்! - ஜெயஸ்ரீ
மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் வழக்குரைஞர் புகாரளித்துள்ளார்.
வழக்குரைஞர் ஜெயஸ்ரீ பாட்டீல் தனது புகாரில், மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தையும் அதில் அனில் தேஷ்முக் மீது குற்றஞ்சாட்டியிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் அனித் தேஷ்முக் பதவி விலக வேண்டும் என்றும் ஜெயஸ்ரீ வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்குரைஞர் ஜெயஸ்ரீ, “இது ஒரு பெரிய குற்றம், காவல்துறை இது குறித்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றச் சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அனில் தேஷ்முக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், தேஷ்முக் மீது உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன்” என்றார்.