தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இணையை தேர்வு செய்யும் உரிமைக்கு மதம் தடை இல்லை - அலகாபாத் உயர் நீதிமன்றம்

மதத்தை காரணம் காட்டி காதல் திருமணத்தை தடுக்க கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர் நீதிமன்றம்

By

Published : Sep 17, 2021, 12:16 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நீதிமன்றத்தில் ஷபியா ஹசன் என்ற பெண் வழக்கு தொடுத்தார். அதில், காதல் இணை இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும் தங்கள் இருவரும் காதலித்து இணைந்து வாழ விரும்புகிறோம். ஆனால் எங்கள் வாழ்விற்கு அச்சுறுத்தல் நிலவுகிறது என பாதுகாப்பு கோரி வழக்கின் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி மனோஜ் குமார் குப்தா, தீபக் வர்மா ஆகியோரின் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வயதுவந்த இரு தனிநபர்களுக்கு தங்கள் இணையை தேர்வு செய்ய முழு உரிமை உண்டு. அந்த உரிமையை அவர்கள் பெற்றோர் உள்பட யாரும் தடுக்க முடியாது.

இல்வாழ்க்கைக்கு மதத்தை தடையாக காட்டி யாரும் அச்சுறுத்தக்கூடாது. அவர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details