புதுச்சேரி: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாக துணைநிலை ஆளுநரின் அறிவிப்பிற்கு எதிரான கருத்தினைத் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
விநாயகர் சதுர்த்தி என்பது இந்து சமயம் சம்பந்தப்பட்ட ஒரு விழாவாகும். இந்தியாவில் மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவினை பொது இடங்களில் கொண்டாடலாம் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதேபோன்று புதுச்சேரி மாநிலத்திலும் துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதிலும் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் துணைநிலை ஆளுநரை நாராயணசாமி குறை சொல்கிறார். துணைநிலை ஆளுநரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.