சண்டிகர்:ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரம் கேடிபி விஐபி சாலை அருகே உள்ள நிலங்கள் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் 2001ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. அந்த வகையில், கன்ஷிராம் என்பவரது 2,178 சதுர அடி நிலமும் கையகப்படுத்தப்பட்டது.
இதனால் கன்ஷிராம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2008ஆம் ஆண்டு நிலத்தை உரிமையாளருக்கே கொடுக்க உத்தரவிப்பட்டது. ஆனால், அவரது நிலத்தின் வழியே சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொடுக்கும்பட்சத்தில் சிக்கல் ஏற்படும் என்றும் மாவட்ட வருவாய்த்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இருப்பினும் கன்ஷிராம் வழக்கிலிருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து 2021ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இதனிடையே திதார் சிங் என்பவரும் அதே பகுதியில் கையகப்படுத்தப்பட்ட தனது நிலத்தைக்கோரி 2006ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு சாதகமான தீர்ப்பை பெற்றார்.
இவர்களுக்கு இதுவரை நிலம் கொடுக்கப்படாமல் இருந்துவந்த நிலையில், நேற்று (ஏப்.27) தங்களது நிலத்தில் வேலி அமைத்துள்ளனர். இதனையறிந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர். அதனடிப்படையில் அவர்களுக்கு நிலத்தை வழங்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க: 40 ஆண்டுகளாக மசூதியில் வழிபாடு நடத்தும் இந்து மக்கள்