ஸ்ரீஹரிகோட்டா: பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடியாக விளங்குவது, சூரியன். சூரியனின் ஒளி இல்லை என்றால் உலகமே ஸ்தம்பித்துவிடும் என்பது நிதர்சனமான உண்மையே. அப்படிப்பட்ட சூரியன் குறித்து ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள நாசா (NASA) விண்வெளி மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது இந்தியா சார்பில் இஸ்ரோவும் (ISRO) இந்த ஆய்வு களத்தில் இறங்கியுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2023 செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) இருந்து அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலமான ஆதித்யா எல்-1 விண்கலம், இன்று மாலை 4 மணியளவில் தனது இலக்கை அடைந்துள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.