ஹைதாராபாத்: தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் டோங்கர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் பழங்குடியின விவசாயி இந்திரவெல்லி ஜோன். இவர் தனக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார்.
தற்போது பருவமழையை முன்னிட்டு தனது விவசாயப் பணிகளை இவர் மும்முரமாக தொடங்கியுள்ளார். ஆனால் நிலத்தை உழுவதற்கு இவரிடம் டிராக்டர் இல்லை. இவரிடம் ஒரே ஒரு எருது மட்டுமே உள்ளது. மற்றொரு எருதை வாங்குவதற்கு பணம் இல்லை.
மாட்டிற்கு பதிலாக மகனை வைத்து ஏர் உழுத விவசாயி இந்நிலையில் விவசாயப் பணிகளையும் தொடங்க வேண்டும். இதை உணர்ந்த அவர், மற்றொரு எருதிற்கு பதிலாக தனது மகனை பயன்படுத்திக் கொண்டார். ஏர்கலப்பையின் ஒருபக்கம் எருது, மறுபக்கம் அவரது மகன் சாய்நாத்தை வைத்து உழவுப் பணியை தொடங்கியுள்ளார்.
விளைநிலத்தில் கலப்பையை இருவரையும் வைத்து இழுக்க செய்து அந்த கலப்பையை பின்னே அழுத்தியவாறு செல்கிறார் இந்திரவெல்லி ஜோன். இதுகுறித்து பேசிய அவர், 'என்னிடம் பணம் இல்லை. வேறு வழியும் இல்லை. அதனால் தான் இப்படி செய்தேன்' என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.
இதையும் படிங்க: உலக பேமஸான சீன யானைகளின் அட்ராசிட்டீஸ் - முழு வீடியோ