டெல்லி: முன்னாள் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன்சுவாமி இல்லத்திற்கு 'z' பிரிவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
தன் வீட்டிற்கு சரியான பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டுமென சுப்பிரமணியன்சுவாமியால் கோரப்பட்ட மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா முன்னிலையில் வைக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில், அவருக்கு 'z' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக முன்வைக்கப்பட்டது. அத்துடன் சேர்த்து ஓர் கூடுதல் வாக்குமூலத்தையும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சுப்பிரமணியன்சுவாமி தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் மேஹ்தா, சுப்பிரமணியன்சுவாமியின் பங்களா சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வருகிற சனிக்கிழமை(நவ.5) 'z' பிரிவு பாதுகாப்புப்படையினர் ஒப்படைக்கப்படுவர் எனத்தெரிவித்தார்.
மேலும், சுப்பிரமணியன்சுவாமியின் சொந்த இல்லத்திற்குப்பாதுகாப்பு இன்னும் அளிக்கப்பட வேண்டுமென்றும், சுவாமி தனது அரசு பங்களாவை விட்டு வெளியேற அக்.26 கடைசி நாளாக அளிக்கப்பட்டது. இதையடுத்து, சுப்பிரமணியன்சுவாமியின் சொந்த வீட்டிற்குப்பாதுகாப்பு அளிக்கப்படுவதாக ஒன்றிய அரசு கடந்த அக்.31 நீதிமன்றத்தில் தெரிவித்தது.