அமராவதி: ஆந்திர மாநில வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் இன்று(செப்.17) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் வீட்டுக்கடன், நகைக்கடன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள், முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சரான பெர்னி வெங்கட்ராமையா, "ஆந்திர மாநிலத்தில் ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்காக மாநில அரசு மூலம் கடன் வழங்கப்பட்டுவருகிறது. இந்தக் கடன்தொகையை தற்போது அதிகரித்துள்ளோம்.