சென்னை:அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஜனவரி 27 அன்று அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இதற்கு முதலில் ஜனவரி 29 அன்று 413 பக்க பதில் அறிக்கையை அதானி குழுமம் வெளியிட்டது.
இதனையடுத்து இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இதனிடையே அதானியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன்படி நேற்று (பிப்.2) மட்டும் ரூ.1.76 லட்சம் கோடி பங்குகளை அதானி குழுமம் இழந்துள்ளது. முக்கியமாக அதானி எண்டர்பிரைசஸ் 26 சதவித பங்குகளை இழந்து, 20,000 கோடியை FPOஇல் விட்டுள்ளது.