தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Adani : வங்காளதேச பிரதமருடன் கவுதம் அதானி சந்திப்பு... கோடா மின்உற்பத்தி ஆலை ஒப்படைப்பு! - Gautam adani Goda Thermal Power plant

அதானி பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான கோடா அதானி பவர் ஜார்கண்ட் லிமிடட் நிறுவனத்திடம் வங்காளதேச மின்வாரியம் நீண்ட கால மின் உற்பத்தி கொள்முதல் ஒப்பந்தம் போட்டு உள்ள நிலையில், பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து அதானி குழும தலைவர் கவுதம் அதானி ஒப்படைத்தார்.

Adani
Adani

By

Published : Jul 15, 2023, 4:35 PM IST

டாக்கா : வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்த அதானி குழும தலைவர் கவுதம் அதானி, ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட்டு உள்ள ஆயிரத்து 600 மெகா வாட் கோடா மின் உற்பத்தி ஆலையை ஒப்படைத்தார்.

இது தொடர்பாக கவுதம் அதானி தன் ட்விட்டர் பக்கத்தில், "ஆயிரத்து 600 மெகாவாட் திறன் கொண்ட அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் கோடா மின் நிலையத்தின் தொடக்க பணி மற்றும் ஒப்படைப்பு குறித்து வங்களா தேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். கரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஏறத்தாழ மூன்றரை ஆண்டு கால இடைவெளியில் மின் உற்பத்தி நிலையத்தை இயக்குவதற்கு உதவிய இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் அர்ப்பணிப்புள்ள அணிகளுக்கு நான் தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வங்காள தேசத்தின் மின்சார வளர்ச்சி வாரியம், அதானி பவர் லிமிடட் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி பவர் ஜார்கண்ட் லிமிடட் நிறுவனத்திடம் நீண்ட கால மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டது. அதன்படி ஜார்கண்ட் மாநிலம் கோடாவில் உள்ள அதானி பவர் ஜார்கண்ட் லிமிடட் நிறுவனத்திடம் இருந்து ஆயிரத்து 496 மெகா வாட் நிகர அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கடந்த மாதம் ஜார்கண்டில் உள்ள அதானி பவர் ஆயிரத்து 600 மெகாவாட் மின் உற்பத்தி ஆலையில் இருந்து வங்களா தேசத்திகு மின் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் அதானி பவர் ஜார்கண்ட் லிமிடட் நிறுவனத்தின் 2x800 மெகாவாட் இரண்டாவது யூனிட்டில் இருந்து அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையத்தின் வணிக செயல்பாட்டு பணிகள் நிறைவு பெற்றதாக கூறப்பட்டது.

மேலும், கோடா மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது அலகின் வணிகச் செயல்பாட்டுச் சோதனைகள் உள்பட அனைத்து சோதனைகளும் வங்காள தேச மின்சார வளர்ச்சி வாரியம் மற்றும் வங்களா தேச மின் வாரிய அதிகாரிகள் முன்னிலையில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திரவ எரிபொருளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் விலையுயர்ந்த மின்சாரத்திற்கு மாற்றாக, கோடா மின் நிலையத்திலிருந்து வழங்கப்படும் மின்சாரம் வங்களாதேசத்தின் மின் பகிர்மான நிலைமையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வகையான மின் விநியோகம் வங்காளதேசம் ஏற்கனவே கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் சராசரி செலவை கணிசமாக குறைக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :Azam Khan : முன்னாள் அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறை... எதுக்கு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details