லண்டன்: லூயி டர்ன்புல் என்ற நபர் லண்டனில் இரண்டு நாய்கள் வளர்த்து வருகிறார். அந்த நாய்களின் பெயர் மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ் (Marshall and Millions). இந்த இரு நாய்களும் ஒரு பெண்ணை தாக்கியுள்ளதாக போலீசாருக்குத் தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த 7ஆம் தேதி அந்த இரு நாய்களையும் அதன் உரிமையாளரையும் போலீசார் துரத்திப் பிடிக்கின்றனர்.
அப்படி ஒரு இடத்தில் பிடிக்கும்போது, அந்த நாய்களின் உரிமையாளரிடம் போலீசார் கேள்வி கேட்கத் தொடங்குகின்றனர். உடனே அவரது இரு நாய்களும் போலீஸை நோக்கி குரைக்கத் தொடங்கியுள்ளது. அப்போது கையில் துப்பாக்கி வைத்திருந்த போலீசார் அந்த இரு நாய்களையும் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. பின்பு அந்த உரிமையாளரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. தற்போது அந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில் அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 7 போலீஸையும் வேலையை விட்டு தூக்கச் சொல்லியும், மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ் நாய்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து நடிகை வேதிகா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இச்சம்பவம் குறித்து வேதிகா பேசியதாவது, "ஒரு நாய் மற்றொரு நாயைப் பார்த்தால் குரைக்கும். இது இயற்கை. அதைத்தான் மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ் ஒரு பெண் உரிமையாளரின் நாயைப் பார்த்து குரைத்துள்ளது. அதை யாரோ போலீசிடம் சொல்லியுள்ளனர். இதனால் 7 முதல் 9 பேர் கொண்ட போலீசார் மார்ஷல் மற்றும் மில்லியன்ஸை துரத்திப் பிடிக்கின்றனர். போலீசார் சுற்றி வளைத்தவுடன் அந்த நாய்கள் குழம்பிப் போய் ஏன் இவர்கள் கையில் துப்பாக்கியுடன் நம்மை துரத்துகிறார்கள் எனக் குரைத்திருக்கிறது.