பெங்களூரு: தயாரிப்பாளரும், நடிகை மாலாஸ்ரீயின் கணவருமான ராமு கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.
தயாரிப்பாளர் ராமுவின் உயிரைப் பறித்த கரோனா! - தயாரிப்பாளர் ராமு மரணம்
நடிகை மாலாஶ்ரீயின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான ராமு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவிற்குத் திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
நடிகை மாலாஶ்ரீ கணவர் மரணம்
மூச்சுத்திணறல் காரணமாக மூன்று நாள்களுக்கு முன்பு எம்.எஸ். ராமையா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அப்போது அவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
ஏ.கே. 47, லாக்கப் டெத், கலாசிபல்யா, சி.பி.ஐ. துர்கா போன்ற ஹிட் சினிமாக்களைத் தயாரித்திருக்கிறார். இவர் சந்தன மர ராமு என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டார். அவரது மறைவுக்கு சினிமாத் துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.