தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பழம்பெரும் தெலுங்கு நடிகை ஜமுனா காலமானார் - ஜமுனா

பழம்பெரும் தெலுங்கு நடிகை ஜமுனா இன்று காலமானார்.

நடிகை ஜமுனா
நடிகை ஜமுனா

By

Published : Jan 27, 2023, 11:18 AM IST

ஹைதராபாத்:தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதியுற்று வந்த அவர், இன்று (ஜனவரி 27) காலமானார். அவருக்கு வயது 86. இவரது மறைவு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பழம்பெரும் தெலுங்கு நடிகை ஜமுனா

சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்த நடிகை ஜமுனா, 1953ஆம் ஆண்டு வெளியான புட்டிலு என்கிற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அன்றைய காலகட்டங்களில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த ராமராவ், அக்கினேனியுடன் ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதோடு தமிழ், தெலுங்கு, கன்னடம் தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

பழம்பெரும் தெலுங்கு நடிகை ஜமுனா

நடிப்பு மட்டும் இன்றி அரசியலிலும் வலம் வந்தவர் ஜமுனா. இவர் 1980-களில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அரசியலில் இருந்து வெளியேறிய பின் 1990-களில் பாஜக சார்பில் பரப்புரைகள் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

இதையும் படிங்க: நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பெண் சிவிங்கிப்புலிக்கு உடல்நலக்கோளாறு

ABOUT THE AUTHOR

...view details