ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் அருகே முண்டோடா கோட்டையில் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானிக்கும் தொழிலதிபர் சோஹைல் கதுரியாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
பிரபல ஜோடி தேர்ந்தெடுத்த 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த முண்டோடா கோட்டையில், ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டங்கள் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது.
ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை ஹன்சிகாவின் திருமணம் 'சூஃபி' தீம் கொண்ட இந்த திருமண கொண்டாட்டத்தில் 'மெஹந்தி', 'ஹல்தி' மற்றும் 'சங்கீத்' உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஹன்சிகா மோத்வானி தனது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
இதையும் படிங்க:'தீ.. தளபதி...' வெளியானது வாரிசு படத்தின் 2ஆவது பாடல்