மேற்குவங்கம்: பெங்காலி சீரியல் நடிகையான பல்லவி தேய் கடந்த வாரம் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 25-ம் தேதி, பெங்காலி திரைப்பட நடிகையும், சீரியல் நடிகையுமான பிதீஷா தீ மஜூம்தார் கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்துகிடந்தார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பெங்காலி நடிகைகள் அடுத்தடுத்து சந்தேக மரணம்! - பிதீஷா தீ மஜூம்தார்
பெங்காலி நடிகை மஞ்சுஷா சந்தேகமான முறையில் உயிரிழந்தார். சமீபகாலமாக அடுத்தடுத்து மூன்று நடிகைகள் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
actress
இந்த நிலையில், பெங்காலி நடிகை மஞ்சுஷா, கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேற்குவங்கத்தில் அடுத்தடுத்து மூன்று நடிகைகள் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம், பெங்காலி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.