தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொலை முயற்சி வழக்கில் மலையாள நடிகர் வினீத் தட்டில் கைது!

கடனை திருப்பி கேட்ட நபரை கத்தியால் தாக்கிய புகாரில், மலையாள நடிகர் வினீத் தட்டில் கைது செய்யப்பட்டார்.

By

Published : Jul 26, 2022, 6:03 PM IST

Actor
Actor

கேரளா: பிரபல மலையாள நடிகர் வினீத் தட்டில் (45), அய்யப்பனும் கோஷியும், அங்கமாலி டைரிஸ் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர், ஆலப்புழையைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

இதில் குறிப்பிட்ட தொகையை திருப்பி தந்துள்ளார். மீதமுள்ள தொகையை திருப்பி கேட்க, நடிகர் வினீத் வீட்டிற்கு நேற்று முன்தினம் (ஜூலை 24) அலெக்ஸ் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த வினீத் கத்தியால் அலெக்சை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அலெக்சை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நடிகர் வினீத்தை கைது செய்தனர்.

இதையும் படிங்க:உடல் எடையைக் குறைக்க தீயாய் வேலை செய்யும் தேஜஸ்வி யாதவ்!

ABOUT THE AUTHOR

...view details