தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வென்டிலேட்டரில் பிரபல நடிகர்! - வென்டிலேட்டரில் பிரபல நடிகர்

ஒரு வாரத்திற்கு முன்பு பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் இருதய கோளாறு காரணமாக ஆஞ்சியோகிராம் செய்துகொண்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வென்டிலேட்டரில் பிரபல நடிகர்!
வென்டிலேட்டரில் பிரபல நடிகர்!

By

Published : Apr 7, 2022, 12:21 PM IST

எர்ணாகுளம் (கேரளா):மலையாளத் திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் சில தினங்களுக்கு முன்பு இருதயத்தில் ஏற்பட்ட தொந்தரவு காரணமாக அங்கமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

66 வயதாகும் ஸ்ரீனிவாசனின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஸ்ரீனிவாசன் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழில் பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருப்பார்.

சில மாதங்களுக்கு முன் வெளி வந்த மலையாள திரைப்படம் ஹிருதயம் படத்தின் இயக்குநர் வினீத் இவரின் மகன் ஆவார். ஹிருதயம் படம் மலையாளம் மட்டுமில்லாது பல தரப்பட்ட ரசிகர்களின் வரவேற்பையும் பெற்ற படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காருக்குள் உயிருடன் எரிந்த 4 உயிர்கள்!

ABOUT THE AUTHOR

...view details