கர்நாடக மாநிலம் , பெங்களூரில் உள்ள பார்க் ஹோட்டல் பப்பில் போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உள்ளூர் போலீசார்( ulsoor) நேரில் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
போதை பொருள் உட்கொண்ட விவகாரத்தில் நடிகை ஷ்ரத்தா கபூர் அண்ணனிடம் விசாரணை - Testing Positive For Drugs in Bengaluru
போதை பொருள் உட்கொண்ட விவகாரத்தில் நடிகை ஷ்ரத்தா கபூர் அண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை ஷ்ரத்தா கபூர் அண்ணன்
அப்போது அங்கு நடிகை ஷ்ரத்தா கபூர் அண்ணன் சித்தாந்த் கபூர் உட்பட பலர் போதை விருந்தில் பங்கேற்றது தெரியவந்தது. போலீசார் அவர்களின் ரத்த மாதிரிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோதனை முடிவில் சித்தாந்த் கபூர் உட்பட 5 பேர் போதை பொருள் உட்கொண்டது உறுதியானது.
தொடர்ந்து 5 பேரையும் போலீசார் உள்சூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Jun 13, 2022, 2:10 PM IST