தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Rajinikanth: "அரசியல் பேச நினைக்கிறேன்; ஆனால் அனுபவம் தடுக்கிறது" - ரஜினிகாந்த் ஓப்பன் டாக்! - தெலுங்கு தேசம் கட்சி

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், என்டிஆரின் படங்களை பார்த்து தான் சினிமாவுக்கு நடிக்க வந்ததாக தெரிவித்தார். மேலும் அரசியல் பேச நினைப்பதாகவும் ஆனால் அனுபவம் தடுப்பதாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Rajinikanth
Rajinikanth

By

Published : Apr 29, 2023, 8:12 AM IST

விஜயவாடா :மறைந்த தெலுங்கு நடிகரும், முன்னாள் ஆந்திரா முதலமைச்சருமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு விழாவில் விஜயவாடா போரங்கி அனுமோலு கார்டனில் நடந்தது. இந்த விழாவில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கூறியதாவது. "இவ்வளவு பெரிய விழாவில் கலந்து கொண்டு தெலுங்கு பேசி நீண்ட நாடக்களாகி விட்டது. நான் ஏதாவது தவறாக பேசினால் மன்னித்துவிடுங்கள். எதை சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஞானம் சொல்கிறது. ஆனால் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று அவை சொல்கிறது.

எதைச் சொல்லக் கூடாது என்பதை அனுபவம் சொல்கிறது. உங்களையெல்லாம் இப்படிப் பார்த்தா எனக்கு அரசியல் பேசணும்னு தோணுது. ஆனால், வேண்டாம் ரஜினி என்று சொல்ல விடாமல் அனுபவம் தடுக்கிறது. நான் பார்த்த முதல் படம் என்டிஆர் நடித்த பாதாள பைரவி. அந்த படம் என் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது.

எனது முதல் படத்திலேயே இது பைரவி வீடுதானா என்ற டயலாக் வரும். நான் துணை நடிகராகவும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒரு இயக்குனர் என்னை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதாக கூறினார். ஆனால், அப்போது எனக்கு கதாநாயகனாக நடிக்க எனக்கு விருப்பம் இல்லை.

கதையை ஒரு முறை கேளுங்கள் என்று அந்த இயக்குனர். மேலும் படத்தின் பெயர் பைரவி என்று கூறினார். அந்தப் பெயரை கேட்டதுமே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். லவகுசா படத்தின் வெற்றிக்காக என்.டி.ஆர் சென்னை வந்தபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்தேன். அப்போது எனக்கு 13 வயது.

ஸ்ரீ கிருஷ்ண பாண்டவியம் படத்தில் என்டிஆர் துரியோதனனாக நடித்து மெய்சிலிர்க்க வைத்தார். பேருந்து நடத்துனராக இருந்தபோது என்டிஆரை கற்பனை செய்து கொண்டு துரியோதனனாக என் நண்பர்களிடம் நடித்து காட்டுவேன். என் நடிப்பை பார்த்த நண்பர்கள் பாராட்டுவார்கள் சினமாவில் வாய்ப்பு தேடு நல்ல வில்லனாக வருவாய் என்று கூறினர்.

நடிகர் பாலகிருஷ்ணா கண்களாலே பார்த்து கொன்று விடுகிறார். அவர் காரை எட்டி உதைத்தால் 30 அடி தூரம் செல்லும். அதனால் நான், ஷாருக்கான், அமிதாப் பச்சன், சல்மான் கான் என யார் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேநேரம் பாலகிருஷ்ணா செய்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

ஏனென்றால் பாலகிருஷ்ணாவை, என்டிஆராகவே மக்கள் பார்க்கின்றனர். அவருக்கு கோபம் அதிகம். ஆனால் இலகிய மனம் கொண்டவர். அவர் திரை உலகிலும், அரசியல் வாழ்விலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்

தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், "எனது நெருங்கிய நண்பரும், அரசியல் தலைவருமான சந்திரபாபு நாயுடு இருக்கும் போது, அரசியல் பற்றி பேசாமல் இருப்பது சரியல்ல. எனக்கு அவரை 30 வருடங்களாக தெரியும். சந்திரபாபு நாயுடுவை எனது நண்பர் மோகன்பாபு அறிமுகப்படுத்தினார்.

அப்போது சந்திரபாபு விரைவில் பெரிய தலைவராக வருவார் என்றும் மோகன் பாபு என்னிடம் அடிக்கடி கூறுவார். 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. அவருக்கு இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியலும் தெரியும். பெரிய அரசியல் தலைவர்களுக்கு சந்திரபாபுவின் மகத்துவம் பற்றி தெரியும்.

ஐதராபாத்தை ஹைடெக் நகரமாக சந்திரபாபு உருவாக்கினார். ஐ.டி. என்றால் என்ன என்று கூட தெரியாத காலத்திலேயே அவர் ஐ.டி.யை ஐதராபாத்திற்கு கொண்டு வந்தார். தற்போது லட்சக்கணக்கானோர் ஐ.டி துறையில் பணியாற்றி வருகின்றனர். தொழிலதிபர்கள் பில் கேட்ஸ் உள்ளிட்டவர்கள் சந்திர பாபுவை பாராட்டினர்.

22 அண்டுகளுக்கு பிறகு நான் ஐதராபாத்தை சுற்றிப் பார்த்தேன். நான் ஐதராபாத்தில் இருக்கிறேனா அல்லது நியூயார்க்கில் இருக்கிறேனா என்று தோன்றியது. சந்திர பாபுவின் 2047 தொலைக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே ஆந்திரா முதன்மை மாநிலமாக மாறும். ஆந்திராவின் நிலை எங்கேயோ போய்விடும்" என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதையும் படிங்க :K Annamalai: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி.. அண்ணாமலைக்கு வந்த புதிய சோதனை!

ABOUT THE AUTHOR

...view details