தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

HBD Mohanlal: மோகன்லாலின் 63ஆவது பர்த்டே... ட்விட்டரில் வாழ்த்துகளைக் குவித்த பிரபலங்கள்! - மோகன்லால் வயது

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு கேரள முதலமைச்சர் மற்றும் திரைப்பட பிரபலங்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

HBD Mohanlal
மோகன்லால் 63 பர்த்டே

By

Published : May 21, 2023, 2:16 PM IST

ஹைதராபாத்: இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர் மற்றும் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர், மோகன்லால். தற்போது இவரது 63ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். நடிகர் மோகன்லால் பெரும்பாலும் மலையாள மொழிப்படங்களில் மட்டுமே அதிகளவில் நடித்துள்ளார்.

4 முறை தேசிய விருது, சிறந்த தயாரிப்பாளர், ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக் குவித்தவர், மோகன்லால். இவர் இந்திய திரைப்படத்தின் மூலம் உலகிற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி 2001ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. இன்னும் ஏராளமான பல விருதுகளைப் பெற்று தேசிய அளவில் மிகச்சிறந்த நடிகர் என்ற விருதிற்கான அங்கீகாரத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய பிரபலங்கள் தங்களது சமூக ஊடகங்களில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதாவது இன்று 63 வயதை எட்டியிருக்கும் மோகன்லாலுக்கு மம்முட்டி முதல் பிருத்விராஜ் சுகுமாரன், துல்கர் சல்மான் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இதயப்பூர்வமான தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மம்முட்டி: மோகன் லாலுடன் ஒரு சிறந்த பிணைப்பைப் பகிர்ந்து கொள்ளும் மம்முட்டி, ஹரி கிருஷ்ணனின் இணை நடிகர்கள் கைகளைப் பிடித்தபடி ஒரு த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்ட மம்முட்டி, "பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே லால்" என்று எழுதியுள்ளார்.

டோவினோ தாமஸ்: மின்னல் முரளி நட்சத்திரம் டோவினோ தாமஸும் சமூக ஊடகங்களில் பிறந்தநாள் அன்பை இதய சின்னத்தில் பொழிந்துள்ளார். மேலும், மோகன் லாலுடன் இருக்கும் ஒரு த்ரோபேக் படத்தைப் பகிர்ந்து கொண்ட டோவினோ, "பிறந்தநாள் வாழ்த்துகள் லால் ஏட்டா" என்று எழுதியுள்ளார்.

பிருத்விராஜ் சுகுமாரன்: மோகன்லாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த, நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரன், மோகன்லால் பிறந்தநாளை முன்னிட்டு லூசிஃபர் அடுத்த பாகத்தின் சிறப்பு போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். பிருத்விராஜும், மோகன்லாலும் லூசிஃபர் படத்தின் அடுத்த பாகத்தில் மீண்டும் இணைகிறார்கள். இந்நிலையில் மோகன்லாலுக்கு பிருத்விராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, "பிறந்தநாள் வாழ்த்துகள் KA! #L2E" என்ற ஹேஸ்டாக்கில் பதிவிட்டுள்ளார்.

துல்கர் சல்மான்: ட்விட்டரில் மோகன்லாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த துல்கர், சூப்பர் ஸ்டாரின் அற்புதமான படத்தைப் பகிர்ந்து கொண்டு, "அனைவருக்கும் அன்பான, லாலேட்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!. உங்கள் எல்லா ரசிகர்களையும் போலவே உங்கள் புதிய வெளியீடுகளுக்காகக் காத்திருக்கிறேன். உங்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்: முதலமைச்சரிடம் இருந்தும் மோகன்லால் அன்பான பிறந்தநாள் வாழ்த்து பெற்றுள்ளார். மோகன்லாலின் படத்தைப் பகிர்ந்த விஜயன், மைக்ரோ - பிளாக்கிங் தளத்தில் "பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு மோகன்லால்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மோகன்லால் பல சுவாரஸ்யமான படங்களை செய்துள்ளார். தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலரில் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார், மோகன்லால். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் முதல்முறையாக தென்னிந்திய சினிமாவின் இரண்டு சூப்பர் ஸ்டார் தரத்தில் உள்ள நடிகர்கள் ஒன்றிணைகின்றனர்.

லூசிஃபர் படத்தின் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் இருந்தாலும், லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் மலைக்கோட்டை வாலிபன் படத்திலும் மோகன்லால் நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகர் பரோஸ் இயக்கும் கார்டியன் ஆஃப் ட்ரெஷர்ஸ் படமும் ஜீத்து ஜோசப்பின் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தையும் மோகன்லால் தன் வசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Malavika Mohanan: ட்விட்டரில் ‘தங்கலான்’ அப்டேட் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்!

ABOUT THE AUTHOR

...view details