தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது - பாலியல் வன்கொடுமை வழக்கு

பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கானை மும்பை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

kamal khan
kamal khan

By

Published : Sep 5, 2022, 8:20 PM IST

மும்பை:கடந்த 2020ஆம் ஆண்டு, மறைந்த பாலிவுட் பிரபலங்களான இர்ஃபான் கான், ரிஷி கபூர் குறித்தும், அவர்களது மறைவு குறித்தும், தரக்குறைவாக ட்விட்டரில் பதிவிட்டது தொடர்பாக பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான் மீது, யுவ சேனா அமைப்பினர் புகார் அளித்திருந்தனர்.

இதுதொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கானை கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி மும்பை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் நடிகர் கமல் ரஷீத் கான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில், மும்பை வெர்சோவா போலீசார் நடிகர் கமல் ரஷீத் கானை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான் கைது

ABOUT THE AUTHOR

...view details