டெல்லி:இந்தி திரையுலகில் முன்னணி நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ. 200 கோடி பண மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையில் கடந்த நவ.20 அன்று சந்திரசேகரின் உதவியாளர் பிங்கி இரானியை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியா பவுலோஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (டிச.12)காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனையடுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து உத்தரவு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கின் மீதான அடுத்த விசாரணை குறித்தான பட்டியல் இடுவதற்கு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு காவல் துறைக்கு நீதிபதி தினேஷ் குமார் சர்மா உத்தரவிட்டார். பொருளதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த ஆண்டு சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்தது.