தானே (மகாராஷ்டிரா): மராத்தி நடிகர் மயூரேஷ் கோட்கரிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் (மகாவிகாஸ் அகாதி) கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.

இந்தக் கூட்டணி அமைச்சரவையில் நகர்புற மேம்பாடு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக இருப்பர் ஏக்நாத் ஷிண்டே. சிவசேனாவை சேர்ந்த இவர் மீது நாடக நடிகர் மயூரேஷ் கோட்கர் என்பர் ஆட்சேபிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் எழுதியதாக சிவசேனா நிர்வாகிகள் தானேவில் உள்ள ஸ்ரீநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் நடிகரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதன்பின்னர் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தினர். அங்கு அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மயூரேஷ் கோட்கர் சிவசேனா அரசுக்கு எதிராக நடந்த பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். மராத்தி மொழியில் வெளியான பல நாடகங்களில் நடித்துள்ள மயூரேஷ், நவிமும்பையில் உள்ள விமான நிலையத்துக்கு டிபி பாட்டீல் பெயர் வைக்க வேண்டும் என்று அகரி சமூகத்தினர் நடத்திய மனித சங்கிலி போராட்டத்திலும் கலந்துகொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.