தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடலுக்கு மேலே அஜித் பேனர்.. கடலுக்கு கீழே விஜய் பேனர்.. ரசிகர்கள் அலும்பல்.. - thunivu

புதுச்சேரியில் துணிவு மற்றும் வாரிசு படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் கடலுக்கு மேலேயும் கீழேயும் பேனர்கள் வைத்து அட்டகாசம் செய்துவருகின்றனர்.

பேனர்
பேனர்

By

Published : Jan 9, 2023, 12:41 PM IST

புதுவையில் பேனர் போட்டி

புதுச்சேரி:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு படமும், விஜயின் வாரிசு படமும் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் 2 பெரிய நடிகர்களின் படம் வெளியாவதால், அவர்களது ரசிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வரவேற்று வருகின்றனர்.

அந்த வகையில், புதுச்சேரியில் எங்கு திரும்பினாலும் அஜித்-விஜய் கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அஜித், விஜய் புகைப்படங்களுக்கு பால் அபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும், ஆங்காங்கே அன்னதானங்கள் கொடுத்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிலர் படங்கள் வெற்றி பெற வேண்டி கோயில்களில் வேண்டுதல் வைக்க தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த அஜித் ரசிகர்கள், புதுச்சேரி காந்தி சிலை அருகே கடலில் உள்ள பழைய பாலத்தின் தூண்களில் துணிவு பேனரை கட்டி அசத்தினர். இதற்கு எதிராக வாரிசு படத்தை வரவேற்கும் விதமாக விஜய் ரசிகர்கள் கடலுக்கு அடியில் சுமார் 200 மீட்டர் ஆழத்தில், ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் வாரிசு பேனர்களை வைத்துள்ளனர். இந்த இரண்டு வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ‘இரண்டு பேரும் நம்ப தம்பிங்க தான்’ - விஜய், அஜித் குறித்து நடிகர் பிரபு

ABOUT THE AUTHOR

...view details