தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலி செய்திகளை தடுத்திட வேண்டும் - சமூக ஊடகங்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை! - ட்விட்டர்

டெல்லி: சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பகிரப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ravishankar
ரவிசங்கர் பிரசாத்

By

Published : Feb 11, 2021, 7:07 PM IST

சமூக ஊடகங்கள் வாயிலாக போலி செய்திகள் பகிரப்பட்டால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பேச்சு சுதந்திரம் நிச்சயம் உண்டு, ஆனால் இது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என 19 ஏ பிரிவு கூறுகிறது. சமூக வலைதளங்களை இந்திய அரசு மதிக்கிறது. சாதாரண மக்களுக்கு சமூக வலைதளங்கள் அதிகாரம் அளித்துள்ளன. டிஜிட்டல் இந்தியா திட்டத்திலும் சமூக வலைதளங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால், போலி செய்திகளைப் பரப்புவதற்கு சமூக வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து சமூக ஊடக தளங்களும் இந்திய அரசியலமைப்பை கடைபிடிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு அரசாங்கத்தையும் பிரதமரையும் விமர்சிக்க நிச்சயம் அனுமதிக்கிறது. ஆனால் போலி செய்திகளை பரப்புவது அனுமதிக்கப்படாது. சமூக ஊடகங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்ய விரும்பினால் இந்திய சட்டங்களை மதிக்க வேண்டும்" என்றார்.

கடந்த சில நாள்களாக மத்திய அரசுக்கும், ட்விட்டருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை (Farmers Protest) தூண்டும் வகையிலான ட்வீட்களை அகற்றுவதற்கான உத்தரவுக்கு பின்னரும், ட்விட்டர் மிகவும் தாமதமாக உத்தரவுக்கு இணங்குவது குறித்து மத்திய அரசு அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மத்திய அரசு பரிந்துரை: 500 கணக்குகளை நிரந்தரமாக முடக்கிய ட்விட்டர்!

ABOUT THE AUTHOR

...view details