தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் நடவடிக்கை - உதவி ஆட்சியர் - புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் நடவடிக்கை

புதுச்சேரியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி ஆட்சியர் கிரி சங்கர் எச்சரித்துள்ளார்.

உதவி ஆட்சியர் எச்சரிக்கை
உதவி ஆட்சியர் எச்சரிக்கை

By

Published : Oct 30, 2021, 5:36 PM IST

புதுச்சேரி: ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட உதவி ஆட்சியர் கிரி சங்கர், ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் மக்களுக்கு பணியாற்றும் வகையில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 176 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி மற்றும் மின் துறை உள்ளிட்ட ஊழியர்கள் இடம்பெற்றுள்ளனர். புதுச்சேரியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவச தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்" என்றார்.

இதையும் படிங்க:ஒருமணி நேரத்தில் 60க்கும் மேற்பட்டோரைக் கடித்த நாய்

ABOUT THE AUTHOR

...view details