டெல்லி: கோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளின் பெயர்களில் எந்தவொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் நிதி சேகரிப்பதைத் தடுக்குமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) உத்தரவிட்டது.
அப்போது, குழந்தைகளின் அடையாளத்தை வெளிப்படுத்தி, ஆர்வமுள்ளவர்களை தத்தெடுக்க அழைக்கிறது. இந்தத் சட்டவிரோத தத்தெடுப்புகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும், சிறார் நீதிச்சட்டம் (Juvenile Justice) 2015 இன் விதிகளுக்கு மாறாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கக்கூடாது" என்று உத்தரவிட்டது.
தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் COVID-19 ஆல் அனாதையான குழந்தைகளை சட்டவிரோதமாக தத்தெடுப்பது தொடர்பான புகார்கள் வெளியாகின. இது தொடர்பான குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) புள்ளிவிவரங்களின்படி 3,621 குழந்தைகள் அனாதைகளாகவும், 26,176 குழந்தைகள் பெற்றோரை இழந்ததாகவும், 2721 குழந்தைகள் ஏப்ரல் 1, 2021 முதல் 2021 ஜூன் 5 வரை கைவிடப்பட்டதாகவும் காட்டுகின்றன.