புதுடெல்லி: டெல்லியில் கடந்த புதன்கிழமை (டிச.14) பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த 17 வயது மாணவி மீது முகமூடி அணிந்த இருவர் ஆசிட் வீசியதில் பலத்த காயம் அடைந்தார். முக்கிய குற்றவாளிகளான சச்சின் அரோரா மற்றும் அவரது நண்பர்கள் ஹர்ஷித் அகர்வால் , வீரேந்திர சிங் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆசிட்டை ஆன்லைன் வழியாக குற்றவாளி வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.