தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளைஞர் மீது ஆசிட் வீசிய தந்தை, மகள் கைது - Acid attack

பீகாரில் கஞ்சாவிற்கு பணம் தராத இளைஞர் மீது ஆசிட் வீசிய கடை உரிமையாளரான தந்தை மற்றும் மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இளைஞர் மீது ஆசிட் வீசிய தந்தை, மகள் கைது
இளைஞர் மீது ஆசிட் வீசிய தந்தை, மகள் கைது

By

Published : Nov 3, 2022, 7:07 AM IST

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள கதாரா கிராமத்தைச் சேர்ந்தவர், அர்ஜுன் முகியா (26). இவர் அப்பகுதியில் உள்ள கடையில் கஞ்சா வாங்கியுள்ளார். பின்னர் வாங்கிய கஞ்சாவிற்காக ரூ.950ஐ அர்ஜுன் கொடுக்கவில்லை. இதனால் கடையின் உரிமையாளர் கணேஷ் சுவர்னாகருக்கும் அர்ஜுனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அர்ஜுன் மீது கடை உரிமையாளர் கணேஷ் மற்றும் அவரது மகள் பூஜா குமாரி (21) ஆகிய இருவரும் ஆசிட் வீசியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அர்ஜுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிஷான்பூர் காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட கடை உரிமையாளர் கணேஷ் சுவர்னாகர் மற்றும் அவரது மகள் பூஜா குமாரியை கைது செய்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட அர்ஜுன் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நான்கு மாத கர்ப்பிணியை முன்னாள் காதலன் கழுத்தை நெரித்துக்கொன்ற கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details