தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகளிர் தினத்தில் அரங்கேறிய கொடூரம்...பெண் மீது திராவக வீச்சு - பெண் மீது ஆசிட் தாக்குதல்

சர்வதேச மகளிர் தினத்தன்று, தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பெண் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ACID ATTACK
ஆசிட்

By

Published : Mar 8, 2021, 3:15 PM IST

ஹைதராபாத்: மார்ச் 8ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு முதலே சமூக வலைதளங்களில் மகளிர் தின வாழ்த்துகள் நிரம்பி வழிகின்றன. பல நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளுக்குச் சலுகைகள் வழங்கியுள்ளன.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் காடிபெட்டாபூர் கிராமத்தில் பெண் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திராவக தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

பெண் மீது ஆசிட் வீசியது யார்? என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். பெண்களை போற்றும் இந்த சர்வதேச மகளிர் தினத்தில், பெண் மீது நிகழ்த்தப்பட்ட திராவக வீச்சு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திருமணத்திற்காக சேர்த்து வைத்த 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details