லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம், காஜியபாத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் செல்போன் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த ஜிரெண்ட்ரா என்பவர் சுட்டு கொல்லப்பட்டார்.
இவர் 12 கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில், ஜிரெண்ட்ராவை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.25,000 வெகுமதி அளிக்கப்படும் என போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் போலீசார் நேற்று (அக். 29) சோதனை சாவடியில் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வருவதைப் பார்த்து வாகனத்தை நிறுத்துமாறு போலீசார் அறிவுறுத்திய நிலையில் நிற்காமல் சென்றதால் போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது ஜிரெண்ட்ரா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட்டதாக கூறப்படுகிறது.
பின், காவல்துறையினர் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். ஜிரெண்ட்ராவுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. போலீசார் ஜிரெண்ட்ராவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சமீபத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் இருந்து செல்போன் திருடிய வழக்கு போன்ற பல வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டு உள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் எல்லை ஊடுருவல் முயற்சி முறியடிப்பு…! பயங்கரவாதி சுட்டுக் கொலை - இந்திய ராணுவம்!