என்சிசி என்னும் தேசிய கேடட் கார்ப்ஸ், வரும் நவம்பர் 22ஆம் தேதி தனது 74ஆவது நிறுவன தினத்தை கொண்டாட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், நாட்டில் ஏறத்தாழ 15 லட்சம் பேர் என்சிசியில் சேர்கிறார்கள். முக்கியமாக கேரளாவில் சுமார் 1 லட்சம் பேர் என்சிசியில் பதிவு செய்கிறார்கள்.
இந்த என்சிசி கேடட்களுக்கு அணிவகுப்பு தொடங்கும் போது சீருடைகள் கட்டாயம். அணிவகுப்பின் போது அவர்கள் தங்கள் கால்களை வலுவாக பதிப்பதால், தலை மற்றும் முதுகெலும்பு காயங்களைத் தடுக்க பூட்ஸ் அவசியம். பெரும்பாலான கேடட்கள் இப்போது இதையெல்லாம் தங்கள் பணத்தில் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதில், சமீபத்திய காலம் வரை, அனைத்து கேடட்களும் தங்கள் சீருடைகளை இலவசமாகப் பெற்று வந்தனர். ஆனால் ராணுவ அளவில் சீருடை கொள்முதலுக்கான டெண்டர் நடவடிக்கைகளில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. அப்போது, சீருடை வாங்குவதற்காக மாணவர்களின் கணக்கில் ரூ.3,800 செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், மாணவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள குறைபாடுகளைக் காரணம் காட்டி, இந்த உத்தரவு விரைவில் திரும்பப் பெறப்பட்டது. இதனையடுத்து என்சிசி அலுவலர்கள், சீருடைகள் தைக்க தேவையான துணி பொருட்களை விநியோகம் செய்தனர். அப்போதும், ஒரு ஜோடி சீருடைகளின் தையல் செலவுக்கு 698 ரூபாய் மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்தனர்.
இருப்பினும், பல நேரங்களில் பணத்தை திருப்பிச் செலுத்துவது நடக்கவில்லை என்று என்சிசி கேடட்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர். அதிலும் சில பள்ளிகள் என்சிசி கேடட்களுக்கு சீருடை வாங்குவதற்கு 2 ஆயிரம் ரூபாயும், இதர பொருள்களை தனியார் நிறுவனம் சப்ளை செய்யும் எனவும் கூறியது.
நாட்டில் பின்னடைவை அடையும் என்சிசி - மத்திய அரசு மீது குற்றச்சாட்டு! இருப்பினும், என்சிசி தலைமையகத்துடன் குறுக்கு சோதனை செய்தபோது, அவர்களால் அத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை ஈடிவி பாரத் அறிந்தது. மேலும், கேடட்களுக்கான சீருடை மற்றும் பிற பொருட்கள் கிடைக்கவில்லை என்பது குறித்து என்சிசி தலைமையகத்தில் உள்ள அலுவலர்கள் ஈடிவி பாரத் செய்தியிடம் சரியான பதிலை அளிக்க மறுத்துவிட்டனர்.
ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வரும் மாணவ கேடட்கள், ஏற்கனவே சீருடைகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதுகுறித்து, முன்னாள் என்சிசி இணை அலுவலர் ஜெயராஜன் கல்பகசேரி, "என்சிசி தற்போது கடுமையான சிக்கலை எதிர்கொள்கிறது. மாணவர் போலீஸ் கேடட்களிடமிருந்து (எஸ்.பி.சி.) கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.
எஸ்.பி.சி., போலீஸ் அலுவலர்களிடமிருந்து முழு பயிற்சி பெறுகிறது. என்சிசியில் கிட் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அவர்களிடம் போதுமான அளவு இல்லை. உடைகள், பூட்ஸ், பெல்ட்கள் மற்றும் பிற பொருள்களை அவர்கள் சரியாகப் பெறுவதில்லை. அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு என்சிசிக்கு வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது” என கூறினார்.
இதையும் படிங்க:அக்னிபத் போராட்டங்கள்: ரயில்வேத் துறைக்கு ரூ. 259.44 கோடி இழப்பு