ரூர்க்கி (ஹரித்வார்): உத்தரபிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம், சிக்கந்த்ராவை சேர்ந்தவர் இமாமி கான். இவர் ரூர்க்கி BEG யில் உதவி கணக்காளராக பணியாற்றினார்.
இவர் மே முதல் ஜூன் 20-ம் தேதி வரை பாகிஸ்தானில் உள்ள ஒரு பெண்ணுடன் செல்போன் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். அந்த பெண் இவரை காதல் வலையில் வீழ்த்தி பல ரகசிய தகவல்களை எடுத்துள்ளார். இமாமி கான் பாகிஸ்தான் பெண்ணுக்கு தகவல் அனுப்புவதை அறிந்து மீரட்டில் இருந்து (உ.பி.) ராணுவ அதிகாரிகள் குழு ரூர்க்கிக்கு வந்து கணக்காளரின் மொபைலை சோதனை செய்தனர்.
அதில் இமாமி கானின் மொபைலில் இருந்து அந்த பெண்ணுக்கு சுமார் 230 மெசேஜ்கள் அனுப்பப்பட்டு இருந்தது. பின் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், பிஇஜியின் பவன் குப்தா, அரசாங்க ரகசியச் சட்டம் மற்றும் மோசடி வழக்கில் கோட்வாலி சிவில் லைனில் கணக்காளர் இமாமி கான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் இமாமி கான் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணை சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திர சிங் பாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக செல்போன் சேவைகள் துண்டிப்பு!