தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.43 லட்சத்துக்கு பிரியாணி வாங்கியதாக போலி கணக்கு - ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்க நிர்வாகிகள் மீது ஊழல் வழக்குப்பதிவு! - ஜம்மு காஷ்மீர் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

நிதி முறைகேடு புகார் எழுந்ததையடுத்து, ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்க நிர்வாகிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரியாணி வாங்கியதாக 43 லட்சம் ரூபாய் போலியாக கணக்கு காட்டியுள்ளனர்.

Biryana
Biryana

By

Published : Jul 31, 2022, 9:04 PM IST

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் மூலம் ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்கத்திற்கு வழங்கிய 45 லட்சம் ரூபாய் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் கால்பந்து போட்டிகளை நடத்தவும், கேலோ இந்தியா, முஃப்தி நினைவு தங்கக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளை நடத்தவும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்க நிர்வாகிகள் மீது ஜம்மு காஷ்மீர் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், "போட்டிகளில் பங்கேற்கும் கால்பந்து அணிகளுக்கு பிரியாணி வாங்குவதற்காக ஸ்ரீநகரில் உள்ள பிரபல உணவகத்திற்கு சுமார் 43 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக, ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்க நிர்வாகிகள் கணக்கு காட்டியுள்ளனர். ஆனால், இதுவரை நடத்தப்பட்ட எந்த போட்டிகளிலும் எந்த அணிகளுக்கும் பிரியாணி வழங்கப்பட்டதாக ஆவணம் இல்லை. இதுதொடர்பாக நிர்வாகிகள் சமர்ப்பித்த ரசீதுகள் போலியானவை. இதேபோல், ஹிந்துஸ்தான் ஃபோட்டோஸ்டாட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பல்வேறு சேவைகளுக்காக பணம் செலவழிக்கப்பட்டதாக போலியான ரசீதுகள் தயாரித்து ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜமீர் அகமது தாகூர், பொருளாளர் எஸ்.எஸ்.பண்டி, தலைமை நிர்வாகி எஸ்.ஏ.ஹமீது உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கைது - அமலாக்கத்துறை அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details