கர்நாடக மாநிலத்தில் இன்று ஊழல் தடுப்பு அலுவலர்கள்(ACB-Anti Corruption Bureau) அரசு ஊழியர்களை குறி வைத்து மெகா சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 15 அரசு ஊழியர்களுக்கு தொடர்புடைய 60 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இதில் பணம், நகை, பத்திரம் உள்ளிட்ட பல ஆவணங்கள் சிக்கியுள்ளன. இந்த ரெய்டின் போது அரசு ஊழியர் ஒருவர் வீட்டில் வடிகால் குழாய்களில் பணம் பதுக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தின் கல்புர்கியை சேர்ந்த பொதுப் பணித்துறை ஜூனியர் இன்ஜினியரான சாந்த கௌடா என்பவரின் வீட்டில் இன்று காலை ஊழல் தடுப்பு அலுவலர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.
இவர் முதலில் வீட்டைத் திறக்க 10 நிமிடத்திற்கு மேல் தாமதம் ஆகியுள்ளது. பின்னர் வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டுள்ளனர். அப்போது அவர் பதுக்கிவைத்திருந்த 40 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகை பிடிபட்டன.