ராய்ப்பூர் (சட்டீஸ்கர்):சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திர யாதவ், கடந்த ஜூலை 1 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குறித்து தவறான செய்தி பரப்பியதாக தனியார் நியூஸ் தொலைக்காட்சி இயக்குநர் மற்றும் தலைவர், அதன் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் மீது புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில், பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததாகவும், மக்களின் மத உணர்வுகளை சீர்குலைத்ததாகவும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கடந்த ஜூலை 5 அன்று காஜியாபாத்தில் உள்ள ரோஹித் ரஞ்சன் வீட்டுக்கு சென்று, அவரை கைது செய்தனர். பின்னர் ரோஹித் ரஞ்சனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.