தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர், அபிட்ஸ் சாலையிலிருந்து கோட்டி சாலை வரை ஏறத்தாழ 2 கி.மீ. தூரம், நெரிசல் மிகுந்த சாலையில், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவகுக்க ஓடிச் சென்றுள்ளார். இது குறித்த காணொலி தற்போது வைரலாகிவருகிறது.
இதனையடுத்து இது குறித்து விசாரிக்கையில், இந்தக் காணொலியில் பதிவாகி இருந்தவர் போக்குவரத்துக் காவலர் பாப்ஜி ஆவார். இந்தச் சம்பவம் கடந்த 2ஆம் தேதி அபிட்ஸ் ஜிபிஓ சிக்னல் அருகே நடந்துள்ளது. சில பிரைம் நேரங்களில் நெரிசலாக இருக்கும் இந்தச் சாலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸை சேர்க்க சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளார். இதற்கு தற்போது பாப்ஜியை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.