மும்பை (மகாராஷ்டிரா): ராய்காட் காவலர்கள் அலிபாக் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது முதல் ட்வீட்டில், “மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அர்னாப் கோஸ்வாமி வழக்கில் அவரச அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது ஏன்? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
தொடர்ச்சியாக மற்றொரு ட்வீட்டில், 'தனிநபர் சுதந்திரத்தை மீறக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து மகா விகாஸ் அகாதி (சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) கூட்டணி அரசாங்கம் எந்த படிப்பினையும் பெறவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.