டெல்லி:டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் சுல்தான்புரி-ஏ வார்டில் ஆம் ஆத்மி கட்சியின் கட்சியின் சார்பாக போட்டியிட்ட திருநங்கை வேட்பாளர் போபி கின்னர் வெற்றி பெற்றார்.
போபி காங்கிரஸ் வேட்பாளரான வருணா டாக்காவை 6,714 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து டெல்லி அரசியலில் நுழைந்த முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வெற்றிக்கு பின்னர் போபி ”எனக்காக கடுமையாக உழைத்த மக்களுக்கு எனது வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி எனது பகுதியில் வளர்ச்சிக்காக உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.