டெல்லி:ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், இந்த மாத இறுதியில் மும்பையில் நடைபெற உள்ள INDIA (இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி) கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்கும் என அறிவித்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “நாங்கள் மும்பைக்குச் செல்ல இருக்கிறோம். எங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து கூட்டத்திற்கு பிறகு உங்களுக்கு (ஊடகங்களுக்கு) தெரிவிக்கப்படும்” என தெரிவித்து உள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் டெல்லி நகரத்தில் உள்ள 7 சீட்களை ஒதுக்குமாறு கேட்டதற்குப் பிறகு ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையேயான வார்த்தை போருக்கு அடுத்ததாக இந்த அறிவிப்பு வந்து உள்ளது. மேலும், காங்கிரஸ் தரப்பில் காங்கிரஸ் தலைவர் இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை என டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா விளக்கம் அளித்து உள்ளார்.
அது மட்டுமல்லாமல், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசத்தில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வைத்து பேசியிருந்தார். அதிலும், மத்தியப்பிரதேச மாநிலம் சாட்னாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “கடந்த 75 வருடங்களாக மத்தியப்பிரதேச மக்கள் இரண்டு கட்சிகளிடமும் (காங்கிரஸ், பாஜக) முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், இதுவரை மின்சாரம் கிடைக்கவில்லை.