டெல்லி: டெல்லி ஆளுநரின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் வளாகத்தில் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷமிட்டனர்.
மத்திய அரசு திங்கள்கிழமை (மார்ச் 15) தேசிய தலைநகர் டெல்லி திருத்தச் சட்டம் 2021 மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திருத்தச் சட்டம் டெல்லியில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்கிறது.
ஆகவே, இந்தத் திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளும் ஆம் ஆத்மி கடுமையாக எதிர்த்துவருகிறது. இந்நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி எம்பிக்கள் கைகளில் பதாகைகளுடன் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.