தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியின் அமைதியை குலைக்க நினைக்கிறது பாஜக - ஆம்ஆத்மி எம்.எல்.ஏ அமனத்துல்லா கான் குற்றச்சாட்டு - டெல்லி ஜஹாங்கிர்புரி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாஜகவினரும் டெல்லியின் அமைதியை குலைக்க நினைக்கிறார்கள் என ஆத்ஆத்மி எம்.எல்.ஏவும், வக்ஃபு வாரிய தலைவருமான அமனத்துல்லா கான் குற்றம் சாட்டினார்.

AAP MLA questions NDMC anti encroachment drive timing  Amit Shah  BJP want to disrupt peace  Delhi BJP chief Adesh Gupta  North Delhi Municipal Corporation  BJP ruled  டெல்லியின் அமைதியை குலைக்க நினைக்கிறது பாஜக  ஆம்ஆத்மி எம்.எல்.ஏ அமனத்துல்லா கான் குற்றச்சாட்டு  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜகவினரும் டெல்லியின் அமைதியை குலைக்க நினைக்கிறார்கள்  டெல்லி ஜஹாங்கிர்புரி  ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் வீடுகளை இடிப்பதாக குற்றச்சாட்டு
அமனத்துல்லா கான்

By

Published : Apr 20, 2022, 9:44 PM IST

டெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரியில், கடந்த வாரம் ஹனுமன் ஜெயந்தியையொட்டி நடந்த ஊர்வலத்தில், இந்து மற்றும இஸ்லாமிய மக்களிடையே மோதல் ஏற்பட்டு, பின்னர் கலவரம் வெடித்தது. இந்த நிலையில், ஜஹாங்கிர்புரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் டெல்லி மாநகராட்சி ஈடுபட்டது.

இந்த நடவடிக்கைக்கு ஆம்ஆத்மி எம்.எல்.ஏவும், டெல்லி வக்ஃபு வாரிய தலைவருமான அமனத்துல்லா கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் வீடுகளை இடிப்பதாகவும், இது அவர்களை துன்புறுத்துவது மட்டுமல்லாமல், அப்பகுதியின் அமைதியையும் கெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்கனவே அமைதி சீர்குலைந்துள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவிருக்கு கோரிக்கை விடுத்தார். இதுபோன்ற மலிவான அரசியல் நாட்டை நாசமாக்கிவிடும்" என்றும் எச்சரித்தார்.

இதையும் படிங்க: குடிசையில் தீ - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

ABOUT THE AUTHOR

...view details