சண்டிகர்: பஞ்சாப் மாநில தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெறஉள்ளது. இந்த வெற்றிமற்ற கட்சிகளின் மூத்த அரசியல் தலைவர்களின் அரசியல் வாழ்க்கையே ஆட்டம் காணச் செய்துள்ளது. தேர்தலுக்கு முன்னதாகவே காங்கிரஸ் உள்கட்சி பிரச்சனையால் தத்தளித்த நிலையில் இறுதியாக அக்கட்சியின் தலித் முகமான சரண்ஜித் சிங் சன்னியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது. ஆனால் அவர் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை.
அதேபோல காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான நவ்ஜோத் சிங் சித்துவும் தனது தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த வீழ்ச்சி ராகுல், பிரியாங்கா காந்தியின் அரசியல் முடிவுகளை கேள்விக்குறியாக்கிவுள்ளது. இதேபோன்று அகாலி தளத்தை பொறுத்தவரையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரகாஷ் சிங் பாதல் , சுக்பிர் சிங் பாதல் ஆகியோர் தங்களது தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.