தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் ஹர்பஜன் சிங்! - Harbhajan

கிரிக்கெட் ரசிகர்களால் பாஜி என வாஞ்சையோடு அழைக்கப்படும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார்.

Rajya Sabha
Rajya Sabha

By

Published : Mar 21, 2022, 2:30 PM IST

சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சந்திரா, ஐஐடி பேராசிரியர் சந்தீப் பதக் உள்பட 5 பேர் ஆம் ஆத்மி சார்பாக மாநிலங்களைக்கு செல்கின்றனர்.

6 மாநிலங்களில் காலியாகவுள்ள 13 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 31ஆம் தேதி நடைபெறுகிறது. ஏனெனில் மாநிலங்களவையில் அஸ்ஸாம், இமாச்சலப் பிரதேசம், கேரளம், நாகாலாந்து மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 9ஆம் தேதியும் நிறைவடைகிறது.

ஹர்பஜன் சிங்

இந்தநிலையில் பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்,

  1. ஹர்பஜன் சிங் (கிரிக்கெட் வீரர்)
  2. சந்தீப் பதக் (ஐஐடி பேராசிரியர்)
  3. ராகவ் சந்திரா (ஆம் ஆத்மி எம்எல்ஏ)
  4. அசோக் குமார் மிட்டல் (கல்வியாளர்)
  5. சஞ்சீவ் அரோரா (தொழிலதிபர்) ஆவார்கள்.

பஞ்சாப் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வாகவுள்ளார் என்று கடந்தவாரம் செய்திகள் வெளியாகின.

அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 92 இடங்களில் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்- அமைச்சராக பகவந்த் மான் பகத் சிங்கின் சொந்த கிராமத்தில் அவரைப் போல் மஞ்சள் டர்பன் அணிந்து பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : மான் அமைச்சரவையில் 10 'சிங்'கங்கள்.. கவர்னர் மாளிகையில் பதவியேற்பு!

ABOUT THE AUTHOR

...view details