தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமீர் கானின் தாயாருக்கு மாரடைப்பு - அமீர் கானின் தாயார் ஜீனத் ஹூசைன்

அமீர் கானின் தாயார் ஜீனத் ஹூசைன் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharatஅமீர் கானின் தாயாருக்கு மாரடைப்பு
Etv Bharatஅமீர் கானின் தாயாருக்கு மாரடைப்பு

By

Published : Oct 31, 2022, 11:38 AM IST

மும்பை (மகாராஷ்டீரா): இந்தி சூப்பர் ஸ்டார் அமீர்கானின் தாயார் ஜீனத் ஹுசைனுக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. அவர் தற்போது மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீபாவளியின் போது அவரது தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

தீபாவளி நாளன்று அமீர்கான் வசித்து வரும் பஞ்சகனி இல்லத்தில் இருந்தபோது அவரது தாயார் ஜீனத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த ஜூன் மாதத்தில் அமீரின் தாயார் ஜீனத் பிறந்தநாளை அவரது குடும்பத்துடன் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் வீடியோக்கள் வைரலானது.

இதையும் படிங்க:இதுவும் கடந்து போகும்... மயோசிடிஸ் தோல் நோய்... சமந்தா உருக்கமான பதிவு...

ABOUT THE AUTHOR

...view details