தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி அரை நிர்வாணப் போராட்டம் - online rummy ban

ஆன்லைன் ரம்மி விளையாட்டை மத்திய- மாநில அரசுகள் தடை செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியினர் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியினர் அரை நிர்வாண போராட்டம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியினர் அரை நிர்வாண போராட்டம்

By

Published : Jun 2, 2022, 1:47 PM IST

புதுச்சேரி: ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏராளமான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த விளையாட்டின் மூலம் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி மூலம் வரும் வரி வருவாய்க்காக வேடிக்கை பார்க்காமல் மத்திய- புதுச்சேரி அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வலியுறுத்தியும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் ஆம் ஆத்மி கட்சியினர் புதுச்சேரி அண்ணா சிலை அருகில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய மற்றும் புதுச்சேரி மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் சீட்டுக்கட்டுகளை தீயிட்டு எரித்தனர்.

இதையும் படிங்க: கன்டெய்னர் லாரி கார் மீது மோதி விபத்து - இருவர் பலி!

ABOUT THE AUTHOR

...view details