தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செல்போன் குறுஞ்செய்தி மூலம் ஆதார் அட்டை திருத்தம்..! - செல்போன் குறுஞ்செய்தி

ஆதார் அட்டையில் தேவைப்படும் அனைத்து மாற்றங்களையும் நமது செல்போன் குறுஞ்செய்தி மூலம் செய்துகொள்ளலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

Aadhaar
Aadhaar

By

Published : Jul 13, 2021, 7:48 PM IST

சென்னை: ஆதார் அட்டையின் தேவை அதிகரித்துவரும் வேளையில், அதில் பொதுமக்களின் சுயவிவரங்கள் பல தவறுகளுடன் இருப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்த திருத்தங்களைச் செய்வதற்கு ஆதார் சேவை மையம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. மேலும், செல்போனில் ஆன்லைன் மூலம் திருத்தம் செய்யும் முறையும் இருந்தன.

தற்போது நமது செல்போன் குறுஞ்செய்தி மூலம் சரி செய்துகொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

நமது அனைத்து வகையான திருத்தங்களையும் ஆன்லைன் வசதி இல்லாமலேயே குறுஞ்செய்தி வாயிலாக இதன்மூலம் செய்துகொள்ள முடியும்.

இதுகுறித்து யுஐடிஏஐ, “உங்கள் ஆதார் ஓடிபி (OTP) மற்றும் தனிப்பட்ட விவரங்களை யாருக்கும் பகிர வேண்டாம். உங்கள் ஆதார் ஓடிபி (OTP)-ஐ கேட்டு இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திலிருந்து (யுஐடிஏஐ) அழைப்பு, எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சலை நீங்கள் ஒருபோதும் பெற மாட்டீர்கள்” என எச்சரிக்கை பதிவு போட்டுள்ளது.

இதையும் படிங்க: 10 ஆண்டு கால தேடல்... மகனை பெற்றோருடன் இணைத்த ஆதார் கார்டு!

ABOUT THE AUTHOR

...view details