தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் ஆதார் மூலம் கண்டுபிடிப்பு - காணாமல்போன சிறுவன் ஆதார் மூலம் கண்டுபிடிப்பு

பிகார் மாநிலத்தில் ஆறு ஆண்டுகளாக காணாமல் போயிருந்த 21 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் ஆதார் அட்டையின் உதவியுடன் அவரது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

பிகாரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மாற்றுத்திறனாளி ஆதார் மூலம் கண்டுபிடிப்பு
பிகாரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மாற்றுத்திறனாளி ஆதார் மூலம் கண்டுபிடிப்பு

By

Published : Sep 2, 2022, 7:27 AM IST

பாட்னா: பிகார் மாநிலத்தில் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த 15 வயது மாற்றுத்திறனாளி (பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்) சிறுவன் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காணாமல் போனார். அதன்பின் நவம்பர் 28ஆம் தேி மகாராஷ்டிராவின் நாக்பூர் ரயில் நிலையத்தில் கண்டறியப்பட்டான். இந்த சிறுவனுக்கு பேச்சு மற்றும் கேட்புத்திறன் இல்லாததால் ரயில்வே அதிகாரிகள் அவனை நாக்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அந்த சிறுவனுக்கு பிரேம் ரமேஷ் இங்காலே என்று பெயரிடப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பின் இந்தப் பெயரை ஆதாருக்கு பதிவு செய்ய அந்த காப்பகத்தின் கண்காணிப்பாளர் வினோத் தேப்ராவ் இந்த மாதம் சென்றிருந்தார். ஆனால், அந்த இளைஞரின் கைரேகை ஏற்கனவே ஒரு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்ததால், புதிதாக உருவாக்க முடியவில்லை.

இதையடுத்து, மும்பையில் உள்ள ஆதார் அடையாள அட்டை ஆணையத்தின் மண்டல அலுவலகத்திற்கு அந்த அதிகாரி நேரில் சென்றார். அங்கு விசாரித்ததில், அந்த இளைஞர் பிகாரின் ககாரியா மாவட்டத்தில் காணாமல் போன சச்சின் குமார் என்பது தெரியந்தது. இதன் பின்னர், அந்த முகவரிக்கு காவல்துறை மூலம் தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து இளைஞரின் தாய் மற்றும் உறவினர்கள் நாக்பூர் வந்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:கேரளாவில் திருமண உறவுகள் 'Use and Throw' கலாசாரம் போல் உள்ளது - வேதனை தெரிவித்த உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details