தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குளிர்பானத்தில் மயக்க மருந்து; பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பெண்ணை மூன்று நாள்கள் அடைத்துவைத்து பாலியல் வன்புணர்வு செய்த இருவரை காவலர்கள் கைதுசெய்தனர்.

Rape
Rape

By

Published : Apr 19, 2022, 10:48 AM IST

ஹைதராபாத்: நெஞ்சை பதை பதைக்க செய்யும் இந்தச் சம்பவம் தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில் உள்ள கோடாட் (Kodad town) நகரில் நடந்துள்ளது.

இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.17) மாலை இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். அவரது ஆடைகள் களையப்பட்டிருந்தன. தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியுற்ற அப்பகுதி மக்கள், பெண்ணை ஒரு இடத்தில் அமர வைத்து, இது குறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

பாலியல் வன்புணர்வு: இந்தத் தகவலின் பேரில் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த காவலர்கள், மயக்க நிலையில் இருந்த பெண்ணை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

பாதிக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை இரவு நடந்துவந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த இருவர் பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று ஒரு ரூமில் அடைத்து வைத்துள்ளனர்.

பின்னர் அவருக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து அப்பெண்ணை இருவரும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்தக் கொடுமை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் அங்கிருந்து பாதிக்கப்பட்ட பெண் தப்பித்து வெளியே வந்து அப்பகுதியில் மயக்க நிலையில் சுற்றிவந்துள்ளார்.

ஆளுங்கட்சி கவுன்சிலர் கைது: தற்போது பெண்ணை காவலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பெண்ணுக்கு ஆதரவாக அவரது உறவினர்களும் காவல் நிலையத்தில் நீதிக் கோரி போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவுன்சிலர் ஆவார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவர் அப்பகுதியில் பணிப் பெண்ணாக வேலை செய்துவந்துள்ளார்.

இதற்கிடையில் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதையும் படிங்க:விருதுநகர் பாலியல் வழக்கு: 2ஆம் நாளாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

ABOUT THE AUTHOR

...view details